September 2024

சென்னை: “என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன்” என துணை முதல்வராகப் பதவியேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் நேற்று (செப்.28) மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பதவியேற்கின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், பெரியார் திடலுக்குச் சென்று தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதோடு, அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துணை முதல்வர் என்பது பதவி அல்ல, எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு. என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது பணியை செய்து வருகிறேன். முதலமைச்சர், மூத்த அமைச்சர்களின் வழிகாட்டுதல்படி செயல்படுவேன்.” என்று கூறினார். பெரியார் திடலில் திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியை சந்தித்தார். தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்குச் சென்று அங்கே அவருடைய உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதி வாழ்ந்த இல்லத்துக்குச் சென்றார். தொடர்ந்து சிஐடி காலனி இல்லத்துக்குச் சென்று தனது அத்தை கனிமொழியையும் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த முதல்வர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம். ‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, பெரியார் - அண்ணா - கலைஞர் வகுத்து தந்த பாதையில், முதல்வரின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

 


சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,043 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள், படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநயகம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருவதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவாரை 11,743 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், டெங்குவின் தீவிரத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,043 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள்தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரத்த வங்கிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கவும், அவசர கால சூழல்களை சமாளிக்கும் வகையில் விரைவு உதவிக் குழுக்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு விவரங்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.



சென்னை: யாரிந்த பெண்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.. ஆனால், இந்த இளம்பெண்ணின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதைப்பார்த்த பலரும் பதறிப்போய் உள்ளனர்.

இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே, அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுவது வழக்கமாகும்.

வீடியோக்கள்: சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும். இப்போது ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது..

 இதைப்பார்த்ததுமே நெட்டிசன்கள் பதறிப்போய் விட்டார்கள். பரபரப்பான ஒரு விமான நிலையத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.. ஏர்போர்ட்டில் ஏராளமான பயணிகள் காத்திருக்கிறார்கள்.. அப்போது ஒரு இளம்பெண் கையில் வெள்ளை கலர் சூட்கேஸூடன் உள்ளே வருகிறார். சூட்கேஸ்: அந்த சூட்கேஸை கையில் வைத்தபடியே சுற்றுமுற்றும் திரிகிறார்.. பிறகு திடீரென அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு, கையில் வைத்திருந்த சூட்கேஸை கடித்து கடித்து சாப்பிட துவங்கிவிட்டார்.

முதலில், சூட்கேஸின் ஒரு முனைப்பகுதியை பிய்த்து சாப்பிட தொடங்குகிறார்.. இதை பார்த்ததுமே சக பயணிகள் அதிர்ச்சியில் விக்கித்து பார்த்தார்கள்.. அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்களும் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டனர். ஆனால், இந்த இளம் பெண் எதைப்பற்றியும் கவலைப்படாமல், சூட்கேசை கொஞ்சம் கொஞ்சமாக ருசித்தபடியே பிய்த்து சாப்பிடுகிறார்..

யாரிந்த பெண்: அந்த பெண் சாப்பிட சாப்பிட, சூட்கேஸின் வடிவமும் மறைந்து கொண்டே வந்தது.. அப்போதுதான், அந்த இளம்பெண் கடித்து சாப்பிட்டது, சூட்கேஸ் வடிவிலான கேக் என்பது தெரியவருகிறது. ஆனால், சூட்கேஸ் முழுக்க சாப்பிட்டபிறகுதான், அது கேக் என்றே தெரியவருகிறது. அப்போதுதான் அங்கிருந்த பயணிகளுக்கு நிம்மதியே வந்தது. இந்த வீடியோதான் இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீ போல இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது.. இதுவரை இரண்டரை கோடிக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ரசித்துள்ளனர்.

இளம்பெண்ணின் குறும்புத்தனத்தை ரசித்து இன்ஸ்டாவாசிகள் கமெண்ட்களையும் பதிவிட்டுவருகிறார்கள்... குறிப்பாக, "ஆச்சரியம்தான்.. இப்படியெல்லாமா சர்ப்ரைஸ் தருவது? எனக்கு இந்த கேக் வீடியோ மட்டுமல்ல, கேக் சாப்பிடுபவரையும் சேர்த்தே பிடித்திருக்கிறது" என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார. கமெண்ட்கள்: இன்னொருவரோ, "இப்படி ஒரு சூட்கேஸை தயார் செய்யபோவதே, இனி என்னுடைய லட்சியம்" என்கிறார்.. மற்றொருவரோ, "இதோ நான் என்னுடைய தொப்பி மாடலை பேக்கரிக்கு தரப்போகிறேன் என்று கிண்டலாக பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த சூட்கேஸ் வீடியோ, கேக் பிரியர்களின் மனதை கொள்ளையடித்து கொண்டிருக்கிறது..!!!



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

December- 7- 2024

December- 7- 2024
Award Function

Contact Us

Name

Email *

Message *

Powered by Blogger.