ரூ.50000/- பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.. முதலமைச்சரின் அறிவிப்பு..!


முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். இதற்கான முதிர்வு தொகையை அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

"சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலரை நேரில் அணுகி இணையதளம் மூலமாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திட்டத்தில் பயன் பெற 1 பெண் குழந்தை அல்லது 2 பெண் குழந்தைகளுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். 2-வது பெண் குழந்தை பிறந்து 3 வயது பூர்த்தி அடையும் முன் விண்ணப்பிக்க வேண்டும். முதல் பெண் குழந்தைக்கு பிறகு 2-வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

ஒரு பெண் குழந்தையுடன் கணவரோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.50 ஆயிரத்திற்கான டெபாசிட் பத்திரம் வழங்கப்படும். 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். முதலில் பெண் குழந்தை பிறந்து 2-வது பிரசவத்தில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் 3 குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரத்திற்கு 3 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும்.இதற்கான முதிர்வு தொகையை அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போது பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் போது தாய் தந்தையரின் மாற்றுச் சான்றிதழ், திருமண பத்திரிகை, குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருப்பதற்கான வருமான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, ஆண் குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என உறுதிமொழி பத்திரம், குடும்ப புகைப்படம், குடும்ப அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை இணைக்க வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04342-233088 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

December- 7- 2024

December- 7- 2024
Award Function

Contact Us

Name

Email *

Message *

Powered by Blogger.