- நாடெங்கும் புதிய தொடக்கப்பள்ளிகள் பல திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 300 பேர் வாழும் சிறு குடியிருப்புகளிலும் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- பள்ளிகளில் கல்வி கற்கக் கட்டணம் இல்லை. தமிழ்நாட்டில் ஒன்று முதல் 10 வகுப்பு முடிய இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
- 10-ஆம் வகுப்புக்கு மேல் படிப்பவர்களுக்கு தமிழ் போதனா மொழி வழிப்படிப்பவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
- ஏழை மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. நண்பகலில் பள்ளியில் மாணவர்களுக்குச் சத்துணவு அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது.
- ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசத் தங்கும் விடுதிகளில் தங்கிப் படிக்க வசதி செய்து தரப்பட்டுள்ளது.
- நலிந்த மக்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு அவர்கள் பள்ளியின் இறுதி வகுப்பு வரை வேறுபாடு இன்றிப் படித்துப் பயன்பெற வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.
- ஆதிதிராவிட கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை மற்றும் அரிமாசங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், மக்கள் தொண்டு நிறுவனங்கள் ஆகியன பல்வேறு வழியில் பணம், கட்டடம், தளவாடம், விளையாட்டு இடம், சத்துணவுக்கான பல்வகை பொருட்கள் இலவசமாக வழங்க ஊக்குவித்து வருகின்றன.
- பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தி அந்தந்த ஊர்மக்களே பள்ளித் தேவைகளை பூர்த்தி செய்வதில் உடல் உழைப்பு, பண உதவி, பண்டங்கள், பாத்திரங்கள் வழங்க அரசு ஊக்குவித்து வருகிறது.
- பள்ளிச்சிறுவர்களின் உடல் நலத்தை இலவசமாக தக்க மருத்துவர்கள் மூலம் சோதித்து குறைகளைக்களைய இலவச மருத்தவ வசதிகள் செய்யப்படுகின்றன.
- பாடங்கள் கவர்ச்சிகரமாகவும், சுவையோடும், பொருத்தமான அணுகுமுறைகளில் கற்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலையில் புத்தகங்களையும், குறிப்பேடுகளையும் அரசே வழங்கி வணிகர்கள் கொள்ளை லாபம் பெறுவதை தடுத்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறது.
- பாடத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறது. தற்காலத் தேவைக்கேற்ப கணக்கு, அறிவியல், புவியியல் போன்ற பாடநூல்களைத் தர உயர்வு செய்துள்ளது. தேச ஒருமைப் பாட்டிற்கு ஊறு நேரா வண்ணம் நூல்கள் தயாரிக்கப்படுகின்றன.
- விளையாட்டு, கைவேலை, கலைவேலை, ஈடுபாடுகள், அறிவியல் துணைப் பொருட்கள் ஆகியவற்றில் அரசு அக்கறை காட்டி ஆண்டு தோறும் போதுமான பண ஒதுக்கீடு செய்து வருகிறது. கண்காட்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
- ஆசிரியர்களின் சம்பள விகிதத்தை உயர்த்தி, ஆசிரியர்கள் கவலையின்றிதம் கற்பிக்கும் பணிகளில் ஈடுபடுகின்ற வகையில் சில சலுகைகளையும், அரசு வழங்கி வருகிறது.
- பிள்ளைகளின் சேர்க்கை, படிப்பை முடிக்கச் செய்தல், தேக்கம், இடைநிறுத்தமின்மை போன்றவற்றில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- ஆண்டு தோறும் நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கியும், இறுதித் தேர்வில் முதலாவதாக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூபாய். ஆயிரம் பரிசுத்தொகை அளித்தும் ஊக்குவிக்கிறது.
Post a Comment