நீட் தேர்வு முறைகேடு சர்ச்சை: காங். அடுக்கும் குற்றச்சாட்டுகளும், மத்திய அரசின் பதிலும்
துடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை மோடி அரசு மூடி மறைக்கத் தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ள நிலையில், நீட் தேர்வர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை, கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலம் மூடி மறைக்க மோடி அரசு தொடங்கியுள்ளது. நீட் வினாத்தாள் கசியவில்லை என்றால் பிஹாரில் வினாத்தாள் கசிவு காரணமாக 13 பேர் கைது செய்யப்பட்டது ஏன்? வினாத்தாளை கசியவிட்ட மோசடி கும்பலுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணம் செலுத்தப்பட்டிருப்பதை பாட்னா காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அம்பலப்படுத்தியது பொய்யா?
Post a Comment